டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள் - சிவகங்கையில் வெறிச் செயல்

x
 • காரைக்குடி அருகே பள்ளத்தூர் அரசு டாஸ்மாக் கடையில் இரண்டாவது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 • சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் கடை வீதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடையில், கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
 • இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் அதேகடையில், மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார்.
 • இதில் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயமடைந்ததோடு, கடையில் இருந்த மதுபாட்டில்களும், பல ஆயிரம் ரூபாயும் எரிந்து நாசமடைந்தது.
 • அரசு நிர்ணயித்ததைவிட அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படும் விவகாரத்தில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், பெட்ரோல் குண்டு வீசியதாக சுரேஷ் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 • பலத்த தீக்காயங்களுடன் கைதான அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   • வாலிபர் வெறிச்செயல் - போலீசார் விசாரண

  Next Story

  மேலும் செய்திகள்