பழனி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள்.. எந்த தேதியில் இயக்கம்? எப்போது கிளம்பும்?

x

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே, முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி கோவையில் இருந்து திண்டுக்கல்லிற்கு, ஜனவரி 28, 29 மற்றும் பிப்ரவரி 4, 5, 6 ஆகிய நாட்களில் காலை 9.20 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

இதேபோல், மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு, இதே நாட்களில் மதியம் 2 மணிக்கு ரயில் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்