KL ராகுலுக்கு 5 நாள் தான் டைம்? - ரோஹித் கொடுக்கும் கடைசி சான்ஸ்
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நாளை தொடங்க உள்ளது.
- இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது
- . இதன் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
- இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
- தொடர்ச்சியாக இந்திய வீரர் கே.எல்.ராகுல் தடுமாறிவரும் சூழலில், இந்தப் போட்டியில் ராகுலுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படக்கூடும். பேட் கம்மின்ஸ் இல்லாததால் ஸ்மித் தலைமையில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா களமிறங்கும் எனத் தெரிகிறது.
- இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்ற இந்தியா தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story