ஆன்லைன் ரம்மி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

ஆன்லைன் ரம்மி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...
x

ஆன்லைன் ரம்மி, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

முதல்வர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், அந்த விளையாட்டை தடை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மியின் பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப் படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்