முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் - குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்

தனி விமானம் டெல்லி செல்லும் அவர், நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூற உள்ளார்...
x

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார்.

தனி விமானம் டெல்லி செல்லும் அவர், நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூற உள்ளார்.


பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து பேசும் முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.


மேலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் பல்வேறு மசோதாக்களுக்கு, விரைந்து ஒப்புதல் அளிக்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்துவார் என தெரிகிறது.


தொடர்ந்து நாளை இரவே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்