'சாட்ஜிபிடி'... "மனிதகுலத்திற்கே ஆபத்து" - ஓர் அதிர்ச்சி எச்சரிக்கை
- மனிதன் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வது மட்டுமல்லாது.. மனிதனை போல் இயந்திரங்களாலும் யோசிக்க முடியும் என செய்து காட்டி அசத்தும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு
- அந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தற்போது கூகுளுக்கே சவால் விடும் வகையில் அறிமுகமான சாட்ஜிபிடி குறித்து தான் தற்போது உலகமே பேசி வருகிறது.
- சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கொண்டு ஒருவர் தாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிக கச்சிதமான பதில்களை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் சாட்ஜிபிடியை பயன்படுத்தி தேர்வு எழுத தொடங்கிய மாணவர்கள்.. சாட்ஜிபிடிக்கு தடை விதித்த பல்கலைக்கழகங்கள்... சாட்ஜிபிடியின் சில பதில்கள் வன்முறையை தூண்டுவதாகவும்... சில பதில்களின் நம்பகதன்மை கேள்விக்குறியானதாலும்.. எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன.
- ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை மிரள வைத்து வரும் இந்த வேளையில்... பலரது வேலை வாய்ப்பை பறிக்கும் அஸ்திரமாக சாட்ஜிபிடி உருவெடுக்க கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கப்பட்டது போலவே... தற்போது பல நிறுவனங்களில் மனிதர்களின் வேலைகளை பறிக்கத் தொடங்கிவிட்டது, சாட்ஜிபிடி.
- பல நிறுவனங்களின் தலைவர்கள், ஊழியர்களுக்கு பதிலாக சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருவதாக ஊடகங்களில் ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம், மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சாட்ஜிபிடி சத்தமே இல்லாமல் வேட்டு வைத்து வருவது அம்பலமாகியிருக்கிறது.
- வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கும் வலைதளமான Resumebuilder.com-ல் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக ஒப்பு கொண்டிருக்கின்றன.
- இன்னொரு புறம் Bing சர்ச் என்ஜின்... Edge web browser என தன் வசம் உள்ள தொழில்நுட்பங்களில் சாட்ஜிபிடியை அறிமுகம் செய்ய ஆரம்பித்துவிட்டது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
- மறுபுறம் ரோபோக்களிலும் சாட்ஜிபிடியைப் புகுத்தினால் என்னவாகும் என்ற அடுத்த கட்ட ஆராய்ச்சியிலும் இறங்கிவிட்டது.
- மனிதர்களை விடவும் வேகமும்.. விவேகமும் காட்டி அசத்தும் ரோபோக்களின் இயக்கத்திற்கு பின்னால் மனிதர்கள் உருவாக்கும் கோடிங் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இனி கோடிங்கிற்கு மனிதர்கள் தேவையில்லை... சாட்ஜிபிடியே போதும் என்ற நிலை உருவானால் அது ஆபத்தில் முடியக்கூடும் என எச்சரிக்கின்றனர், வல்லுநர்கள்.
- இதுவரை வெறும் தகவல்களை எழுத்துக்களாக மட்டும் தந்து வந்த சாட்ஜிபிடி... இனி யோசித்து மனிதர்களை போல் முடிவு எடுத்து ரோபோக்களை கட்டுப்படுத்த இருப்பதே இதற்கு காரணம்.
- சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எந்திரன் படத்தில் டாக்டர் வசீகரன் தயாரித்த ரோபோ அவருக்கு எதிராகவே திரும்பியதை எண்ணிப்பார்த்தாலே போதும்... நிபுணர்களின் எச்சரிக்கையை நாம் புரிந்து கொள்ளலாம்.
Next Story