அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வரும் 30ம் தேதி விசாரணை

x

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து ஈ.பி.எஸ், தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். இதனால், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது உறுதியானது.இதையடுத்து, ஓ.பி.எஸ், மற்றும் வைரமுத்து தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்