ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் குடியரசு தலைவருடன் திமுக நிர்வாகிகள் இன்று சந்திப்பு...
ஆளுநர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இன்று சந்திக்க உள்ளனர்.
இன்று முற்பகல் 11.45 மணி அளவில், இந்த சந்திப்பு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழுவில் சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ. ராசா, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குடியரசுத்தலைவரை சந்திக்கும் குழுவினர், அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story