தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் சிறப்புரை

தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்...
தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் சிறப்புரை
x

தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.


தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சி.வி.கணேசன், அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருவதாகப் பாராட்டினார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏராளமான புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்