#nagarkovilissue #viralvideo நாகர்கோயிலில் இளைஞரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கும்பல் – சிசிடிவி காட்சி வைரல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில், பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடசேரியைச் சேர்ந்த ராஜேஷ், டெலிட் சந்திப்பு அருகே குடிநீர் கேன் வாகனத்துடன் நின்றிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், முகமூடி அணிந்து ராஜேஷை இரும்புக்கம்பி மற்றும் கற்களால் சரமாரியாகத் தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகிலுள்ள மருத்துவமனைக்குள் புகுந்ததால் உயிர் தப்பினார். காயமடைந்த ராஜேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அஜித் என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவான பிரவீன், ஸ்ரீராம் ஆகியோரைத் தேடி வருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன