சமீபத்திய செய்திகள்

Uttarpradesh | சரக்கு பாட்டில்களை சாலையில் போட்டு அடித்து நொறுக்கிய பெண்கள்.. உ.பி.யில் பரபரப்பு

Uttarpradesh | சரக்கு பாட்டில்களை சாலையில் போட்டு அடித்து நொறுக்கிய பெண்கள்.. உ.பி.யில் பரபரப்பு

thanthitv

#Uttarpradesh #Tasmac #LiquorBottle #ThanthiTV Uttarpradesh | சரக்கு பாட்டில்களை சாலையில் போட்டு அடித்து நொறுக்கிய பெண்கள்.. உ.பி.யில் பரபரப்பு உத்தரபிரதேசத்தில் மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் மதுபாட்டில்களை சாலையில் கொட்டி நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அங்குள்ள அரசு மதுபானக் கடைக்குள் புகுந்து, மதுபாட்டில்கள் மற்றும் டெட்ரா பேக்குகளை வெளியில் எடுத்து வந்து சாலையில் வீசினர். சாலையில் கொட்டப்பட்ட மதுபானப் பெட்டிகளை தடிகளால் தாக்கி நொறுக்கிய பெண்கள், சாலையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் மதுக்கடை இருப்பதால், ஆண்கள் குடித்துவிட்டு வீடுகளுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தாக்குவதாக குற்றம் சாட்டிய பெண்கள், மதுபழக்கத்தால் அப்பகுதியில் 10 இளைஞர்கள் இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை துறையினர் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உத்திரவாதம் அளித்ததையடுத்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.

Lorry Accident | நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம்

BREAKING || வந்தது தீர்ப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

BREAKING || "வண்டிய லெஃப்டில் விடுங்க..." யாருமே எதிர்பாரா CM விஜய்யின் விசிட்

Gingee Girl Missing Case | செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில்.. தீவிரமாக இறங்கிய CBCID டிஎஸ்பிக்கள்

Tasmac | "100% டாஸ்மாக்.." - நிர்வாகம் கொடுத்த விளக்கம்