#thenkasi | #doctor | #viralvideo மருத்துவமனையில் நர்ஸை கொடூரமாக தாக்கும் டாக்டர்? - வைரலாகும் ஷாக் வீடியோ தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை, மற்றொரு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தாக்கியதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் 27 வயதான பெண், செவிலியர் பற்றாக்குறை காரணமாக புளியங்குடி மருத்துவமனையில் மாற்றுப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் விஜய் பிரதாப் சிங்கிற்கும், செவிலியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை அலுவலர், விளையாட்டாக நடந்த சம்பவம் என்றும், செவிலியர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.