Murasu Cyclone | Telangana | முரசு புயல் தாக்கம் - ஏரியில் படகுகள் கவிழ்ந்து 16 பேர் மாயம் #Telangana #MurasuCyclone #Fishermen தெலுங்கானாவில் முரசு புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் ஏரி நிரம்பி, மீன்கள் துள்ளிக் குதித்து வெளியேறும் நிலையில், அவற்றைத் தடுக்கச் சென்ற மீனவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் படகு கவிழ்ந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளி அருகே பெத்துப்பள்ளி பெரிய ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, மீன்கள் வெளியேறின. இதனைத் தடுக்க வலை அமைக்கச் சென்ற 8 மீனவர்களின் படகு கவிழ்ந்தது. அவர்களில் 3 பேர் முதலில் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கச் சென்ற குழுவினரின் படகும் கவிழ்ந்ததில் 10 மீட்புப் பணியாளர்கள் மற்றும் வழிகாட்டச் சென்ற மீனவர் என 11 பேர் மாயமாகினர். பின்னர் தகவலின் அடிப்படையில் மீட்புக் குழுவினர் 4 பேரை மீட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது