ADMK | Maduranthakam | செங்கல்பட்டில் அடிப்படை வசதி செய்து தருவதாக அதிமுக வேட்பாளர் உறுதி #ADMK #maduranthakam #Byelection #TNelection2026 #TNpolitics #thanthitv மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், கனிதா சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.. அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம், ராவத்தநல்லூர், வடக்கு நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, 5-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையம், பேருந்து நிறுத்தம் மற்றும் சுத்தமான குடிநீர் வசதி வேண்டும் என அடுக்கடுக்காக கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த கனிதா சம்பத், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்தால், சட்டமன்றத்திற்கு சென்றதும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அச்சரப்பாக்கம் நகரில் வேப்டாளர் கனிதா சம்பத்திற்கு, பெண்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.