Tamilnadu Election 2026

DMK | சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு வெள்ளி வாள் வழங்கி உற்சாக வரவேற்பு

சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு வெள்ளி வாள் வழங்கி உற்சாக வரவேற்பு

thanthitv

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு ஆதரவாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த ஜீப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்ற அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், செங்கோல் மற்றும் வீரவாள் வழங்கி மரியாதை செய்தனர்.. மேலும் பட்டாசு வெடித்து, சால்வை மற்றும் மலர் கீரிடம் அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அரசு நலத்திட்டங்களை முன்வைத்து திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்