Tamilnadu Election 2026

Chennai TVK Campaign | வீடுவீடாக `விசில்’ கொடுத்து ஊதவைத்து ஓட்டுகேட்ட தவெக வேட்பாளர்

வீடுவீடாக `விசில்’ கொடுத்து ஊதவைத்து ஓட்டுகேட்ட தவெக வேட்பாளர்

thanthitv

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக், வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பகுதியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது, பொதுமக்களுக்கு "விசில்"களை வழங்கிய சினோரா அசோக், எதிர்வரும் தேர்தலில் தனது வெற்றிச் சின்னமான விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த தேர்தல் பிரசாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கட்சியின் பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று "விசில்" சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

TVK Karaikudi | காரைக்குடியில் பிரசாரம் - மதுரையிலேயே ஸ்தம்பித்ததால் வேன் மேல் ஏறிய விஜய்

Gold Price Today | ரவுண்டாக ஒரு ஜம்ப் அடித்த தங்கம் - இன்றைய விலையில் மாற்றம்

Udhayanidhi Stalin| Vijay | உதயநிதிக்கு மறுப்பு.. காரணம் `விஜய்?'

TVK Vijay | கார் நின்ற உடனேயே மின்னல் வேகத்தில் நுழைந்த விஜய்

TVK Vijay | சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. சட்டென்று நடந்த சம்பவம்