Special Report | 4 வருசமா தபால்களை பதுக்கிய போஸ்ட்மேன்... வீட்டில் சிக்கிய பல மூட்டைகள் - திறந்து பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஏ.டி.எம் கார்டுகள், ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டுகள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட பல முக்கியமான தபால்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கிவைத்த தபால்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்காரு. இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் கார்த்திக்...