நாடாளுமன்ற தேர்தல் 2024

வட தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? எதிர்பாரா டுவிஸ்ட்.. ஷாக் சர்வே ரிசல்ட்

தந்தி டிவி

வடக்கு மாவட்டங்களில் உள்ள 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு என்பதை தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் விரிவாக காணலாம்...

தந்தி டிவி நடத்திய பிரம்மாண்ட கருத்துகணிப்பு முடிவுகளின் படி, வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அரக்கோணம் தொகுதியில் திமுகவின் ஜெகத்ரட்சகன் 37 முதல் 43 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் ஏ.எல்.விஜயன் 25 முதல் 31 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு 22 முதல் 28 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 32 முதல் 38 சதவீத வாக்குகளையும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 31 முதல் 37 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பசுபதி 22 முதல் 28 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 38 முதல் 44 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 32 முதல் 38 சதவீத வாக்குகளையும், பாஜகவின் அஸ்வத்தாமன் 15 முதல் 21 சதவீத வாக்குகளை பெறலாம் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 39 முதல் 45 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் 31 முதல் 37 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் கணேஷ் குமார் 16 முதல் 22 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் 40 முதல் 46 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாள பாக்யராஜ் 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், பாமக 10 முதல் 16 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 39 முதல் 45 சதவீத வாக்குகளையும், திமுக வேட்பாளர் மலையரசன் 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையார் 9 முதல் 15 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் 6 முதல் 9 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துக்கணிப்பில் தெரிகிறது.

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 39 முதல் 45 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 34 முதல் 40 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 10 முதல் 16 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் 7 முதல் 10 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி 33 முதல் 39 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 29 முதல் 35 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் அசோகன் 23 முதல் 29 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி