உலகம்

Iran US War| ஈரான் இதயத்தை நோக்கி குறிவைத்த அமெரிக்கா - உலகின் சப்தநாடிகளையும் அடக்கிய அறிவிப்பு

ஈரான் இதயத்தை நோக்கி குறிவைத்த அமெரிக்கா - உலகின் சப்தநாடிகளையும் அடக்கிய அறிவிப்பு

thanthitv

ஈரான் இதயத்தை நோக்கி குறிவைத்த அமெரிக்கா - உலகின் சப்தநாடிகளையும் அடக்கிய அறிவிப்பு ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் எச்சரிக்கை ​ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் அல்லது கடற்படைக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தினால், ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் மின் நிலையங்கள் மீது நேரடி வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ​ ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏவுகணை, ராக்கெட் அல்லது ட்ரோன் மூலம் எந்தவொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும், பதிலடி தரும் விதமாக அந்நாட்டின் ஒரு பாலம் அல்லது மின் நிலையம் அமெரிக்காவால் குண்டுவீசி தகர்க்கப்படும் என டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ​ தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்தத் தாக்குதல் இலக்குகளில் அடங்கும் என்றும், ஈரானின் கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ​ இதனிடையே, ஈரானின் அமைதியான அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதும் அச்சுறுத்துவதும் ஐ.நா. பட்டய விதிகள் மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் குற்றம்சாட்டியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாரக் (Larak) தீவு மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையிலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க ஈரானிய மக்கள் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்பார்கள் என ஈரான் எச்சரித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்