ஸ்பெயின் - உக்ரைன் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து ஸ்பெயின் - உக்ரைன் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், அந்நாட்டு மன்னர் ஆறாம் பிலிப்பை சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இருவரும் விரிவாக ஆலோசித்தனர். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ உதவித் திட்டத்தை, ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் மற்றும் டிரோன் விமானங்களை, உக்ரைனுக்கு ஸ்பெயின் வழங்க உள்ளது. முன்னதாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸையும் சந்தித்த ஜெலென்ஸ்கி, பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.