#iranuswar #iranisraelwar ஈரான் போர் விரைவில் முடிவு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பெரும்பாலான உடன்பாடுகள் எட்டப்பட்டுவிட்டதால் ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் என்றார். மேலும், ஈரானில் உள்ள அணுசக்தி மூலப்பொருட்களை அமெரிக்காவே எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். லெபனான் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், ட்ரம்ப் இதனை வரவேற்றுள்ளார். இருப்பினும், அணுசக்திப் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.