உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது

ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.

தந்தி டிவி

ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர். சிகிச்சை முடிந்து, ஜெர்மனியில் இருந்து ரஷ்யா திரும்பிய அவர், விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது, விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. முன்னதாக நவால்னி அருந்திய தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதும், அதற்கு அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்