உலகம்

Spain | Migrants | ஐரோப்பாவிற்குள் நுழைய உயிரையே விலை கொடுக்கும் அகதிகள் | உலகை உலுக்கும் சோகம்

ஐரோப்பாவிற்குள் நுழைய உயிரையே விலை கொடுக்கும் அகதிகள் | உலகை உலுக்கும்

thanthitv

ஐரோப்பாவிற்குள் நுழைய உயிரையே விலை கொடுக்கும் அகதிகள் | உலகை உலுக்கும் சோகம்

ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 50,000 அகதிகள் - 67 பேர் உயிரிழந்த சோகம் ஆப்பிரிக்க நாடான மொராக்கோ வழியே ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள 'சியூட்டா' (Ceuta ) பகுதிக்குள் ஊடுருவ முயன்று நீரில் மூழ்கியும், நெரிசலில் சிக்கியும் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடல் வழியேயும் எல்லை வேலிகள் வழியேயும் ஆபத்தான முறையில் ஊடுருவியவர்களில் 48,000-க்கும் மேற்பட்டோரை ஸ்பெயின் அரசு 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மொராக்கோவிற்கே திருப்பி அனுப்பியுள்ளது. இன்னொரு புறம் ஊடுருவலைத் தடுக்க எல்லைக் கடலோரத்தில் 500 மீட்டர் நீள மிதவைத் தடுப்புகளை ஸ்பெயின் காவல்துறை அமைத்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமையன்று உயிரைப் பணயம் வைத்து கடற்கரை வடிகால் குழாய்க்குள் ஒளிந்திருந்த 25 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியின் சோகமான நிலையை உணர்த்துகிறது. வாழ்வாதாரத் தேடலும், ஒரு நல்வாழ்வுக்கான போராட்டமும் மனித உயிர்களை எவ்வாறு சாக்கடை குழாய்களுக்குள்ளும், ஆபத்தான எல்லைப் பகுதிகளுக்குள்ளும் முடக்கிப்போடுகிறது என்பதற்கு இந்த காட்சி சாட்சியாக மாறியுள்ளது

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை