மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், அகதிகளாக படகுகளில் மலேசியா நோக்கிச் சென்றனர். மலேசியா, தாய்லாந்து எல்லையில் லங்காவி அருகே சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேரின் சடலங்களை மலேசியா கடற்படையினர் மீட்டுள்ளனர். இதேபோல மற்றொரு படகும் கவிழ்ந்ததால், அதில் இருந்த 230 பேரின் கதி என்ன? என்பது தெரியவரவில்லை.