போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து போப் பேசிய முதல் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் (Saint Peter's Square) பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு மக்கள் திரண்டபோது, போப் பிரான்சிஸ் பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அதில், தான் நலம்பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்வதாக போப் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்த மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.