உலகம்

Plague|ரஷ்ய லேப்பில் கசிந்ததா விஷக்கிருமி - உலகை நடுங்க விடும் உயிர் பலி.. உள்ளே இறங்கும் அமெரிக்கா

ரஷ்ய லேப்பில் கசிந்ததா விஷக்கிருமி - உலகை நடுங்க விடும் உயிர் பலி.. உள்ளே இறங்கும் அமெரிக்கா

thanthitv

ரஷ்ய லேப்பில் கசிந்ததா விஷக்கிருமி - உலகை நடுங்க விடும் உயிர் பலி.. உள்ளே இறங்கும் அமெரிக்கா #russialabissue #plague #trump ஆய்வக ஊழியர் மரண விவகாரம் - புதினுடன் ட்ரம்ப் விரைவில் ஆலோசனை சைபீரியாவில் பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தில் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ​ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய 28 வயதான தர்யா ஷிபிலோவா (Darya Shipilova) என்ற ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, நிலவும் அசாதாரண சூழல் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அறியப்படாத வகை லேசான நுமோனியாவால் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்ததாக ரஷ்ய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும், பிளேக் கிருமி பரவியிருக்குமோ என்ற அச்சத்தால் அவருடன் தொடர்பில் இருந்த பலரை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இதனால் ரஷ்ய மக்களிடையே பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை இதுகுறித்து ஆராய்ந்து வருவதாகவும், விரைவிலேயே இதுகுறித்த முழுத் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

Thoothukudi 260 விசைப்படகுகளை கடலுக்கு போகவிடாமல் தடுத்த `புரட்டாசி’ சோகத்தில் மீனவர்கள்

Onion Price Hike இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை

SIR Protest| தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

High Court | TN Police | பிரியாணி அபிராமிக்கு இடியை இறக்கிய ஹைகோர்ட்

Sriperumbudur | ஹான்ஸ் கேட்டு உ.பி. நபர் தகராறு - போலீஸ் அடியில் கல்லீரல் கிழிந்து மரணம்.?