உலகம்

"பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஒழிக்க இணைவோம்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ராணுவ தளவாடங்கள் வழங்க உள்ளதாகவும், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டோல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்க இணைந்து செயல்படுவதாக கூறினார். இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு என்று கூறிய டிரம்ப்,விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவத்துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் எனடிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்பின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, டிரம்பின் வருகை, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெருமையளிக்கிறது என்றார். இரு நாடுகளுடைய நட்பு, அசைக்க முடியாதது என்றும், இது வரலாற்று சிறப்புமிக்க உறவு என்றும் கூறினார்.

TN 10th Result 2026 | வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..

Keralam | NDRF | பரபரப்போடு கேரளம் விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை

Rowdies Arrest | Chennai | ரவுண்டு கட்டும் ஸ்பெஷல் ஆபரேஷன்.. லாக்கான தி.நகர் ரவுடிகள்

CM Vijay | TVK | CPM | "மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.." - தவெகவுக்கு CPM கடும் கண்டனம்

🔴LIVE : TVK | ADMK | CPM | தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எச்சரிக்கை