உலகம்

திடீரென வெடித்து சிதறிய வாக்கி டாக்கி.. பலியான உயிர்கள்.. வெளியான பகீர் வீடியோ

தந்தி டிவி

லெபனானில், இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை தொலைத்தொடர்பு கருவிகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்; சுமார் 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், பல்வேறு பகுதிகளிலும் வாக்கி- டாக்கி ரேடியோக்களும், வயர்லஸ் கருவிகளும் புதன்கிழமை வெடித்துச் சிதறின.

இதில், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர சில வீடுகளில் சூரியமின்சக்தி உபகரணங்களும் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேலை சேர்ந்த உளவு அமைப்பு நிகழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்