இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இத்தாலியில் பனி சறுக்கில் ஈடுபட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்கு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்ததை அடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பனி உருகுவதற்குள் பனிச்சறுக்கில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரும் பனி மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.