"இஸ்ரேல் - லெபனான் இடையே விரைவில் நேரடி பேச்சுவார்த்தை" இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரும் நாட்களில் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளி குழு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான் தொடர்பான விவகாரங்களை கையாள முன்னாள் அமைச்சர் ரான் டெர்மரை பொறுப்பில் நியமித்துள்ளார். அவர் லெபனான் பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை முயற்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்காவின் சார்பில் இந்த முயற்சியை வழிநடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சந்திப்பு சைப்ரஸ் அல்லது பாரிஸ் நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.