மோதலை முடிக்க 5 நிபந்தனைகள் விதித்த ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா விடுத்த அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு ஏமாற்று வேலை எனச் சாடியுள்ள ஈரான், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர 5 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. தங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நிபந்தனைகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரான் அரசு, இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.