நிஜமாகவே பாக்., தான் ஈரான் போரை நிறுத்தியதா? - உடைந்தது குட்டு.. டிரம்ப் ஆடிய `மங்காத்தா’ அம்பலம்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு கைமாறாக ஈரான் போரில் டிரம்ப்புக்கு உதவிய பாகிஸ்தான் ஈரான் உடனான போர் முற்றிய நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தான் தற்போது போர் நிறுத்த மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் போது, பாகிஸ்தானைக் காப்பாற்ற ட்ரம்ப் உதவியதற்கு கைமாறாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் ட்ரம்ப்பைத் தொடர்ந்து புகழ்ந்து வந்த நிலையில், ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தானின் எல்லையையும், செல்வாக்கையும் ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டார். பாகிஸ்தான் வெளியிட்ட போர் நிறுத்த அறிக்கையை வெள்ளை மாளிகையே இறுதி செய்ததாக நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. சீனாவின் ஆதரவோடும், ஈரான் புரட்சிகரப் படையுடனான தொடர்பைப் பயன்படுத்தியும் பாகிஸ்தான் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இதன் மூலம் ட்ரம்ப் தனது செல்வாக்கைச் சரிசெய்து கொள்ள முற்பட்டாலும், சர்வதேச அரசியலில் பாகிஸ்தான் அமெரிக்காவின் வெறும் ஒரு கருவியாகவே மாறியுள்ளதாக வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.