உலகம்

Trump Modi Meeting| ``இந்தியாவை யாராவது தாக்கினால்..’’ - உலக நாடுகளுக்கு டிரம்ப் வார்னிங்

``இந்தியாவை யாராவது தாக்கினால்..’’ - உலக நாடுகளுக்கு டிரம்ப் வார்னிங்

thanthitv

``இந்தியாவை யாராவது தாக்கினால்..’’ - PM மோடியை அருகில் வைத்து.. உலக நாடுகளுக்கு டிரம்ப் வார்னிங் #trumpmodimeeting #indiausrelations பிரதமர் மோடியை பாராட்டி தள்ளிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடி பிரதமராக இருக்கும் வரை, இந்தியாவை யாராவது தாக்க முற்பட்டால், அமெரிக்கா முதல் ஆளாக களமிறங்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடனான கலந்துரையாடலுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்கள் நாட்டு தாக்குதலில் உயிரிழந்த 3 இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார். பிரதமர் மோடி, தமது நீண்டகால நண்பர் என்று குறிப்பிட்ட டிரம்ப், பார்ப்பதற்கு தேவதூதன் போலத் தெரிந்தாலும், மோடி மிகவும் கண்டிப்பானவர் என்று தனது பாணியில் பாராட்டி பேசினார். மோடி தலைமையிலான இந்திய அரசு, மேற்காசியா விவகாரத்தில் முக்கிய பங்காற்றும் என்று தெரிவித்த டிரம்ப், இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்தோ அல்லது தாக்குதலோ நேர்ந்தால், அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா நிச்சயம் களமிறங்கும் என்றும் உறுதியளித்தார். அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட நெருங்கிவிட்டதாக தெரிவித்த டிரம்ப் , பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் என்பதால், நாங்கள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்று உறுதியளித்தார். கச்சா எண்ணையின் விலை குறைந்து வருவதால் விரைவில் அது, 4 மாதத்திற்கு முந்தைய நிலையை எட்டி விடும் என்றும் அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | Govt Employees| 30% சம்பளம் + 60% DA.. அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

Hormuz Strait | Donald Trump | Iran US War | "இனி தடை இல்லை..." - அதிரடியாக மாறப்போகும் ஹார்முஸ்

Iran US War | முடிவுக்கு வந்த ஈரான் - அமெரிக்கா போர் - கையெழுத்து போட்ட இருநாட்டு அதிபர்கள்

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை