உலகம்

Hormuz| Trump | ஹார்முஸை சுற்றிவளைத்த ராட்சச கப்பல்கள் - மொத்தமாக Siege செய்ய டிரம்ப் உத்தரவு

ஹார்முஸை சுற்றிவளைத்த ராட்சச கப்பல்கள் - மொத்தமாக Siege செய்ய டிரம்ப் உத்தரவு

Web Team - Thanthi TV

ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட டிரம்ப் உத்தரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக முற்றுகையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்தும் எந்தவொரு கப்பலையும் இடைமறிக்க அமெரிக்கக் கடற்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு' உள்ளிட்ட பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் சர்வதேச விதிகளை மீறுவதாகவும், உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் கடற்படை மற்றும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அந்நாடு கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைத்துள்ளதாகக் கூறுவது கப்பல் உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் தலைவர்களின் தலைமையைப் பாராட்டியுள்ள டிரம்ப், அவர்களை அசாதாரணமான மனிதர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான ஒரு பயங்கரமான போரில் இருந்து 3 முதல் 5 கோடி உயிர்களைக் காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் தலைவர்கள் தமக்குத் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

CM Stalin``தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்’’ - முதல்வர் ஸ்டாலின்

PMK Ramadoss | பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ் - திடீர் பரபரப்பு

Vijay | Jananayagan Case Arrest | ஜனநாயகன் லீக் - கைது செய்தது சைபர் கிரைம்

Anbumani | PMK | NDA | "இந்த மாவட்டத்துல ஒரு அமைச்சர்..." - பிரசாரத்தில் ஆவேசமாய் பேசிய அன்புமணி

ADMK ``ஒரு கட்சியோடு கூட்டணி வச்சா.. இஸ்லாமிய மக்கள் சிந்திக்க வேண்டும்’’ - ஈபிஎஸ் கொடுத்த விளக்கம்