பிரான்ஸ் நாட்டின் பல்கலைகழத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. லயான் நகரில் உள்ள பல்கலைகழகத்தின் மேல் மாடி தளத்தில், ரசாயன எரிவாயு பாட்டில் வெடித்ததில், கட்டிடம் தீ பற்றியுள்ளது. தகவறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.