மாலி நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா, கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைநகர் பாமாகோ அருகே உள்ள கடி பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தின் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் காமாரா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம் மற்றும் துவாரெக் கிளர்ச்சியாளர்கள் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்....
அமைச்சரின் மறைவையொட்டி மாலியில் இரண்டு நாட்கள் துக்கம் அணுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...