நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ஷகீல் உள்ளிட்ட மேலும் 18 பேரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க தளபதி சாஜித் மீர், மற்றொரு குற்றவாளியான யூசுப் முசாமில் முகமது பாய், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையதின் மைத்துனர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 18 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.