குரோஷியா நாட்டில் இருக்கும் அழகான மிகப்பழமையான தேசிய பூங்காவாகும்..1979 ல் UNESCO பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் இந்த பூங்காவை கண்டுரசிக்க வருகிறார்கள்.. பல்வேறு நீர் வீழ்ச்சிகள் நிரம்பி இருப்பது தான் இந்த பூங்காவின் சிறப்பம்சம்..
இங்குள்ள 16 ஏரிகளும் ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் மூலம் ஒன்றோடொன்று இணைந்து அழகான தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றன..
சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் குவிந்தாலும் கட்டுப்பாடு காரணமாக, ஏரி நீர் சுத்தமாக கண்ணாடி போல காட்சியளிக்கிறது... மீன்கள் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களை தெளிவாக காண முடிகிறது... அது மட்டுமின்றி சுற்றிலும் அடர்த்தியான அழகான மரங்கள் நிறைந்த பரந்து விரிந்த காடுகள் கண்களை கவர்கிறது..
ஆனாலும் இப்பகுதி 1960 களில் தான் பிரபலமடையத்துவங்கியது.. அதுவும் இப்பகுதியில் அதிக அளவில் சினிமா படப்பிடிப்பு நடத்த துவங்கியதன் பின்னர் இன்று மிக முக்கிய சுற்றலா மையமாக காட்சியளிக்கிறது.. ஆங்காங்கே அழகான குகைகளும் , சுண்ணாம்பு பாறை நீர்வீழ்ச்சிகளும் தென்படுகின்றன.
மரங்களின் வேர்கள், சுண்ணாம்பு பாறைகளின் வழியே கொட்டும் நீர் என்பதால், இவை மூலிகை மகத்துவம் நிறைந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் 2006 முதல், நீர்வீழ்ச்சியிலோ அல்லது ஏரிகள் ஆறுகளிலோ இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் தனித்துவம் மிக்க 1267 தவாரங்கள் மற்றும் 109 விலங்கினங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.