உலகம்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி.. கடல் கடந்து சென்ற புனித நீர்

தந்தி டிவி

இந்தியா மற்றும் டிரினிடாட் - டொபாகோ நாடுகள் இடையிலான நட்பு புதிய உச்சங்களைத் தொடும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அந்நாட்டின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் Port of spain நடைபெற்ற ​நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரினிடாட் - டொபாகோ பிரதமர் காம்லா பெர்சாட் Kamla Persad பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, காம்லா பெர்சாட்டின் முன்னோர்கள் பீகாரில் வாழ்ந்ததால், அவரை பீகாரின் மகள் என்று அழைத்தார். மேலும் அவருக்கு மகாகும்பமேளா மற்றும் சரயு புனித நீரை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தனது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும், தனக்கு அன்பான வரவேற்பு அளித்த பிரதமர் காம்லா பெர்சாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு