தென்சீனக் கடலில் சீனா திடீர் கூட்டுப் போர்ப் பயிற்சி
தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய 'ஸ்கார்பரோ ஷோல்' கடல் பகுதி மற்றும் வான்வெளியில், சீன ராணுவமும் அந்நாட்டின் கடலோரக் காவல் படையும் இணைந்து திடீர் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இப்பகுதியில் புதிய இயற்கை சரணயாலயக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, அனுமதியின்றி மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது. இது பல நாடுகளின் பாரம்பரிய மீன்பிடி தளம் என்ற 2016-ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை சீனா தொடர்ச்சியாக நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.