உலகம்

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு

கம்போடியா நாட்டில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தந்தி டிவி

கம்போடியாவை சேர்ந்த கலை பண்பாட்டுத் துறை மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்புடன் இணைந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் கம்போடியா நாட்டின் கெமர் பேரரசுக்கும் பல்லவ சோழ பேரரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கம்போடிய அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம், கம்போடிய நாட்டு பள்ளி, கல்லூரிகளில் பல்லவர், சோழ பேரரசின் வரலாற்றை பாடமாக வைக்கவும், திருக்குறளை கெமரில் மொழியில் பெயர்த்து பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும்,கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அச்சிலைகளின் திறப்புவிழா கம்போடியாவில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்