உலகம்

"புத்தாண்டு தினத்தில் 3 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன" - ஐ.நா. சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை

புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன என்று, ஐ.நா. தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

2019ம் ஆண்டு, புத்தாண்டு தினமான, ஜனவரி 1-ம் தேதி மட்டும், இந்தியாவில் சுமார் 69,944 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐ.நா கணித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ` ஒரு நாளைக்கு இந்தியாவில் 69 ஆயிரத்து 70 குழந்தைகளும் சீனாவில் 44 ஆயிரத்து 760 குழந்தைகளும் நைஜீரியாவில் 20 ஆயிரத்து 210 குழந்தைகளும் பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 910 குழந்தைகளும் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் பிறப்பதாகவும் இந்த நிலை தொடர்ந்தால், 21-ம் நூற்றாண்டுக்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 18 சதவிகிதமாக உள்ளது. இந்த நிலையில், புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி மட்டும் இந்தியாவில் 69 ஆயிரத்து 944 குழந்தைகளும், சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில், 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளதாக என ஐ.நா கணித்துள்ளது.

உலகம் முழுவதும் 2019 ஜனவரி 1-ம் தேதி 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் 90 சதவிகிதம் பிரசவங்கள் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகளில் நிகழ்வதாகவும், அவற்றில் 20 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரே நாளில் உயிரிழப்பதாகவும் 26 லட்சம் குழந்தைகள் ஒரு வாரத்துக்குள் உயிரிழப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 சதவிகித உயிரிழப்புகள் முன் கூட்டியே நடைபெறும் பிரசவம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் ஏற்படக்கூடியவை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளில் உலகளவில் குழந்தைகளில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் ஐ.நா. ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID