கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 25 மீட்டர் rapid fire pistol பிரிவில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில், சீன வீரர் சு லியான்போஃபன் 36 புள்ளிகள் பெற்று தங்கம் வென்ற நிலையில், கொரிய வீரர் லீ ஜேக்யூன் வெண்கல பதக்கம் வென்றார். precision சுற்றில் 290 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் இருந்த அனிஷ் பன்வாலா, ரேபிட் சுற்றில் 293 புள்ளிகள் பெற்று, மொத்தமாக 583 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறினார். இந்தப் போட்டிகளில், 40 தங்கம், 18 வெள்ளி உட்பட 75 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.