உலகம்

ஒற்றை சிறுவனுக்காக கூடிய ஒட்டுமொத்த மக்கள்... உலகையே திரும்ப வைத்த பாச நிகழ்வு

தந்தி டிவி

துருக்கியின் இஸ்தான்புல் நகரில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் குணமடைந்ததை கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.

இஸ்தான்புல்லை சேர்ந்த ஒருவர், தனது மகன் ரத்த புற்றுநோயில் இருந்து குணமடைந்ததை கொண்டாட விரும்புவதாகவும், ஆனால் தங்களுக்கு யாரும் இல்லை எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, தனது மகன் குணமடைந்ததை வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு கொண்டாட இருப்பதாகவும், அதில் இணைய விரும்புபவர்கள் வரலாம் எனவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அவரது இந்த பதிவுகள் துருக்கி முழுவதும் வைரலான நிலையில், அந்த சிறுவனுக்காக இஸ்தான்புல்லில் ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, அந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

சிறுவனுக்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்