உலகம்

"கம்யூ. உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் குடியேற தடை" - புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

பிற நாடுகளை சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், அமெரிக்காவில் குடியேற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, உலகின் எந்த நாடுகளிலும் உள்ள, சர்வாதிகார கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களும், அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாகவும் புதிய கொள்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமெரிக்காவில் தற்போது தற்காலிகமாக வசித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே, அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..