#hmsduncan #iranwar சைப்ரஸ் தீவில் உள்ள பிரிட்டனின் அக்ரோதிரி (Akrotiri) விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய தரைக்கடல் பகுதிக்கு அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். மேலும் "தங்கள் தளங்களைப் பாதுகாப்பதில் சமரசம் இல்லை" என நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஸ்டார்மர், இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், பிரிட்டன், ஈரானுடன் நேரடிப் போரில் ஈடுபடவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.