மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில், விஜயதசமி விழாவை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார். ராணுவ வாகனங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், ராஜ்நாசிங் மலர்கள் தூவி பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத்சிங், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.