ZECODE | Perambur | பெரம்பூரில் ஜீ கோடு நிறுவனத்தின் பிரம்மாண்ட ஆயத்த ஆடைகள் ஷோரூம் திறப்பு #zecode #perambur #thanthitv பெரம்பூர்-ஜீ கோடு நிறுவனத்தின் பிரம்மாண்ட ஆயத்த ஆடைகள் ஷோரூம் திறப்பு சென்னை பெரம்பூர் ஜவஹர் நகரில், சியாராம்ஸ் குழுமத்தின் ஜீ கோடு நிறுவனத்தின் புதிய பிரம்மாண்ட ஆயத்த ஆடைகள் ஷோரூம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 9,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். ஜீகோடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெயக்கர் ஷெட்டிகர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அபிஜீத் காவ்டே, நிஷாந்த், ராகவன், தொழிலதிபர் அசோகன் மற்றும் கட்டிட உரிமையாளர் ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இந்த ஷோரூம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜீகோடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெயக்கர் ஷெட்டிகர், சாமானிய மக்களும் வாங்கும் வகையில் 5,000-க்கும் மேற்பட்ட நவீன டிசைன்களில் ஆடைகள், காலணிகள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளிலும் புதிய ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.