தமிழ்நாடு

இளைஞரை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல் - தகாத வார்த்தையால் பேசியதால் ஆத்திரத்தில் கொலை

கரூரில் எலெக்ட்ரிஷியன் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர்களே ஒன்று சேர்ந்து கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்....

தந்தி டிவி

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். 27 வயதான இவர் எலெக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி புனிதவள்ளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக புனிதவள்ளி தன் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற பின்னர் ரஞ்சித் குமாருக்கு பெண்கள் பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல பெண்களுடன் அவர் நெருங்கி பழகி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதிக்கு எலெக்ட்ரிகல் வேலைக்காக சென்ற ரஞ்சித் குமார் 7 பேர் கொண்ட கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டார்.

அவரை அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்தது. இதில் படுகாயமடைந்த ரஞ்சித் குமார் உயிரிழந்தார். ரஞ்சித் குமாரை கொன்றது யார்? என்பதை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது தான் ரஞ்சித் குமாருக்கு இருந்த பெண் பழக்கம் குறித்து தகவல் வெளியானது. பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக அவரது நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது. கலையரசன் என்பவருக்கு திருமண பேச்சு எழுந்த நிலையில் அதுகுறித்து ரஞ்சித்குமார் அவதூறான வார்த்தைகளை கூறவே அது மோதலாக வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நண்பர்கள் ரஞ்சித்குமாரை சுற்றி வளைத்து வெட்டிக் கொன்றதும் விசாரணையில் வெளியானது. இதையடுத்து கலையரசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்