தமிழ்நாடு

கணவன் பிறந்தநாளில் மனைவி தற்கொலை : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய மனைவி, அதன் பிறகு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை சேலையூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் பிறந்தாளை தனது இறந்தநாளாக மாற்றிய மனைவியின் விபரீத முடிவு பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி

சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர், ஜெய்கணேஷ். இவர் தனது மனைவி பிரவீணா உடன் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் பிரதீப் என்ற மகன் உள்ளான்.

கடந்த புதன்கிழமை காலை ஜெய்கணேஷின் பிறந்தாள் அவரது வீட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கணவனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த மனைவி பிரவீணா, ஜெய்கணேஷ் மற்றும் மகன் பிரதீப் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்கு பிறகு, ஜெகதீஷிடம் உடலை ஒப்படைத்தனர். வாங்கும் சம்பளத்தில் பெற்றோருக்கு உதவும் ஜெய்கணேஷ், எதிர்கால சேமிப்பிற்கு பணம் கொடுக்கவில்லை என பிரவீணா குற்றம்சாட்டி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணவனின் பிறந்தாளை தன்னுடைய இறந்தநாளாக பிரவீணா மாற்றியது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி